பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள்
மதுரையில் வில்லாபுரம் பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி, எடுத்து ஊர்வலமாக வந்தனர்.;
மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு இன்று (ஆக.1) காலை நூற்றுக்கணக்கான பக்தர்கள் வைகையாற்றுக்கு சென்று நீராடி பால்குடம், அலகு குத்தி, அக்னி சட்டி ஏந்தி ஊர்வலமாக வைகை ஆற்றிலிருந்து புறப்பட்டு வில்லா புரம் நோக்கி ஊர்வலமாக வந்தனர்.அதனை தொடர்ந்து கோவிலில் அபிஷேகம்,ஆராதனைகள் பூஜைடன் நடைபெற்றன.