பாலமேட்டில் மலேசியா நாட்டுக்காரர் மரணம்.

மதுரை பாலமேட்டில் உள்ள நண்பனை பார்க்க வந்த மலேசியா நாட்டுக்காரர் உயிரிழந்தார்.;

Update: 2025-08-01 08:09 GMT
மலேசியா நாட்டின் ஜோகூர் நகரை சேர்ந்த ஜோசப் வில்பிரட் நெட்டோ ( 66 ) என்பவர் எலக்ட்ரீசியன் ஆக அங்கு பணிபுரிந்து வந்தார். தற்போது ஓய்வு பெற்ற இவர் பொதும்பு பாலமேடு மெயின் ரோடு, ஸ்டார் நகரில் வசிக்கும் கிருஷ்ணனின் மகன் ஜெயச்சந்திரன் நண்பர் என்பதால் கடந்த 28ஆம் தேதி பாலமேடுக்கு வந்து ஜெயச்சந்திரன் வீட்டில் ஜோசப் வில்பிரட் நெட்டோ தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று (ஜூலை .31)காலை பாத்ரூம் சென்றவர் பொழுது மயங்கி கீழே விழுந்ததில் சுயநினைவை இழந்துள்ளார். உடனடியாக அவரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தார். இது குறித்து ஜெயச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் அலங்காநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News