புதுக்கோட்டையில் தனியார் மருத்துவமனையில் இன்று (ஆகஸ்ட் 1) உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது. இந்த விழாவை புதுக்கோட்டை ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தியது. இந்த விழாவில் டாக்டர் சலீம் மற்றும் மகப்பேறு மருத்துவர் அனிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தாய்ப்பால் அவசியம் பற்றி கூறினர்.