சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட மூக்கனேரி ஏரியை ரூ.23 கோடியில் புனரமைத்து கரைகளை உயர்த்தி பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை ஆணையாளர் இளங்கோவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். தொடர்ந்து செட்டிச்சாவடியில் ரூ.7 கோடியே 94 லட்சத்தில் திடக்கழிவு குப்பைகளை அகற்றும் பணியை பார்வையிட்டார். பின்னர் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களின் வருகை பதிவேடுகளை பார்வையிட்டார். அப்போது வீடு, வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்கும் பணி செய்யும் போது பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து பணி செய்ய வேண்டுமென என தூய்மை பணியாளர்களிடம் கூறினார். இந்த ஆய்வில் மாநகர பொறியாளர் ஆர்.செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.