சாலைப் பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
காரிமங்கலத்தில் நடைபெறும் சாலை பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு;
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், எலுமிச்சனஅள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் MM சாலை முதல் எட்டியானூர் வரை 3.50 கி.மீ தொலைவிற்கு சாலை மேம்பாடு பணிகள் நடைபெற்று வருவதை நேற்று மாலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் இயக்குநர் மெர்சி ரம்யா,IAS, தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், IAS, முன்னிலையில் களஆய்வு மேற்கொண்டார்கள். உடன் கோட்டப் பொறியாளர் (நெ) நாகராஜி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் / திட்ட இயக்குநர் ஜெ.ரூபன் சங்கர் ராஜ், செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.