அரூரில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை
தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டாரத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை;
தமிழகத்தில் மேற்கு திசை காற்று சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், தர்மபுரி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டிருந்த நிலையில் அரூர் கோட்டப்பட்டி பகுதிகளில் நேற்று இரவு முதல் கடத்தூர், பையர்நாயக்கன்பட்டி, நவலை, வேப்பம்பட்டி, அரூர், மாம்பட்டி, கீரைப்பட்டி, அச்சல்வாடி, எல்லப்புடையாம்பட்டி, அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்