வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் பணம் திருட்டு
அண்ணா பல்கலைக்கழக ஊழியரின் வீட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் பணம் திருட்டு காவலர்கள் விசாரணை;
தர்மபுரி தொழில்மையம் பகுதியில் வசித்து வரும் சத்யநாராயண மூர்த்தி திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி இயக்குனராக பணிபுரிந்து வருகின்றார் நேற்று முன்தினம் வீட்டுக்கு பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னை சென்றுள்ளார் நேற்று காலை அக்கம்பக்கத்தினர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு சத்திய நாராயண மூர்த்திக்கு தகவல் தெரிவித்தனர்.பின்னர் விரைந்து வந்து வீட்டை பார்த்தபோது வெள்ளி பொருட்கள் மற்றும் 5000 பணம் காணாமல் போய் உள்ளது இது குறித்து அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் நேற்று வைத்த அளித்த புகாரின் பேரில் காவலர்கள் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.