ஊராட்சி மன்ற புதிய கட்டிடத்தை திறந்து வைத்த எம் எல் ஏ
மதுரை வாடிப்பட்டி பகுதியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்.;
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்கள் நேற்று (ஆக.1) வாடிப்பட்டி ஒன்றியம் பூச்சம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பூச்சம்பட்டி முதல் ராமையன்பட்டி வரை புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டார். இவ்விரு நிகழ்வுகளிலும் திமுக முக்கிய நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.