புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் ரயில்வே கேட் அருகே அசோக் குமார் (42) என்பவர் 3 சீட்டு லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இதனையடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருக்கோகர்ணம் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஆண்ட்ராய்டு மொபைலை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.