புதுக்கோட்டை மாவட்டம் கீழாநிலை அடுத்த நம்பூரணிப்பட்டியில் உள்ள ஸ்ரீ செண்பக சாஸ்தா அய்யனார் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெறுவதற்கு முன்பே கோவில் பூட்டப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த பக்தர்கள், காரைக்குடி - பட்டுக்கோட்டை பிரதான சாலையில், அறநிலைய துறையின் அவல நிலையை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.