சாலை விபத்தில் வாலிபர் பலி.
மதுரை தெப்பக்குளம் அருகே நடந்த சாலை விபத்தில் வாலிபர் பலியானார்.;
மதுரை மாவட்டம் மேலூர் யூனியன் அலுவலகம் அருகே குடியிருக்கும் ஈஸ்வரனின் மகன் ஆதிகேசவன் (19) என்பவர் நேற்று முன்தினம் (ஜூலை.31) இரவு 9 மணி அளவில் தெப்பக்குளத்தில் இருந்து விரகனூர் செல்லும் சாலையில் விரகனூர் கூட்டுறவு சொசைட்டி முன்பாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது அந்த வழியாக திருப்பரங்குன்றம் வெள்ளைமலையை சேர்ந்த ஓட்டுநர் நாகராஜனின் பேருந்து மோதியதில் வாலிபர் படுகாயம் அடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (ஆக.1) காலை உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை ஈஸ்வரன் சிலைமான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.