நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை பார்வையிட்ட அமைச்சர்
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை பார்வையிட்ட அமைச்சர்;
தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால், 1256 உயர்தர மருத்துவ மையங்கள் மூலம், 17 சிறப்பு மருத்துவ துறைகளின் கீழ், கட்டணமின்றி மருத்துவ சேவைகள் வழங்கும், மக்களின் மருத்துவ நலன்களை காக்க கூடிய நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம், நேற்று காலை சென்னையில் துவக்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சியில் நடைபெற்ற முகாமை சிறு குறு தொழில் நிறுவனங்கள் அமைச்சர் த. மோ. அன்பரசன் துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா, அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.