அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 20-ந் தேதி வருகை தரும் முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் அரக்கோணத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக அமைப்பு செயலாளரும் மாவட்ட பொறுப்பாளருமான திருத்தணி கோ.அரி மற்றும் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சு.ரவி எம்.எல்.ஏ. பேசுகையில் தொண்டர்கள் அனைவரும் எழுச்சியுடன் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வேண்டும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாரபலம், பணபலம், கூட்டணி பலத்தை வைத்துக் கொண்டு வருகிற சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று சொல்கிறார். அவருக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். அ.தி.மு.க.விற்கு மக்கள் பலமும், தொண்டர்கள் பலமும் உள்ளது. மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை இணை செயலாளர் ராம்குமார், மாநில மருத்துவர் அணி துணை செய லாளர் டாக்டர் பன்னீர்செல்வம், மாநில வர்த்தக அணி பிரிவு மான்மல் மற்றும் நகர, ஒன்றிய, பேரூர், கிளை செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.