நெமிலி அருகே உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்;
நெமிலி ஒன்றியம் சிறுணமல்லி ஊராட்சி, சம்பத்ராயன்பேட்டை கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தாசில்தார் ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் வரவேற்றார். நெமிலி ஒன்றியக் குழு தலைவர் பெ.வடிவேலு கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டார். முகாமில் நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுணமல்லி, நாக வேடு, கீழாந்துரை, மேலாந்துரை ஆகிய ஊராட்சிகளை உள்ள டக்கிய கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமை தொகை, ரேஷன்கார்டு, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். பயனாளிகளுக்கு பல்வேறு துறை சார் பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முகாமிற்கு வரும் பொதுமக்களுக்கு உதவி மையம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு தன்னார்வலர்களால் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டது. இதில் நெமிலி மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் பெருமாள், ஊராட்சி மன்ற தலைவர் மின்னல்ஒளி அம்பேத்ராஜ், ஒன்றிய நிர்வாகிகள் நரசிம்மன், சீனிவாசன், சாவுத்திரி சுந்தரவடிவேல், தமிழ் அன்சாரி, தனசேகர், சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.