உசிலம்பட்டியில் மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

மதுரை உசிலம்பட்டி தற்காலிக பேருந்து நிலையம் அருகே மயங்கி விழுந்த நபர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.;

Update: 2025-08-03 06:15 GMT
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தற்காலிக பேருந்து நிலையம் அருகே நேற்று (ஆக.2) காலை 8 மணி அளவில் ராம்நாடு சாயல்குடியை சேர்ந்த கோவிந்தராஜ் (45) என்பவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து உசிலம்பட்டி விஏஓ செல்வராஜ் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News