திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மாதங்களாக பெய்த பரவலான மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து திறந்து விடப்பட்டதால் தற்பொழுது ஆறு,குளம்,கால்வாயில் தண்ணீர் பரவலாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நொச்சிகுளம் பகுதியில் இன்று (ஆகஸ்ட் 3) நெல் நாற்று நடவும் பணி துவங்கியது.இதில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.