அச்சிறுப்பாக்கம் சுற்றியுள்ள பகுதியில் கனமழை
அச்சிறுப்பாக்கம் சுற்றியுள்ள பகுதியில் கனமழை;
அச்சிறுப்பாக்கம் சுற்றியுள்ள பகுதியில் கனமழை முதல் மிதமான மழை,தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குடன் பயணம் செங்கல்பட்டு மாவட்டம், சோத்துப்பாக்கம் மேல்மருவத்தூர்,அச்சிறுப்பாக்கம் தொழுப்பேடு,எல் எண்டத்தூர் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கோடை வெயிலை மிஞ்சும் அளவிற்கு வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீர் என இருள் சூழ்ந்து இடியுடன் கூடிய கனமழை சோத்துப்பாக்கம், அச்சிறுப்பாக்கம், மேல்மருவத்தூர், தொழிப்பேடு ஆகிய பகுதிகளில் கனமழை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கொட்டி தீர்த்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் வானம் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் முகப்பு விளக்குடன் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கனமழை காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகியுள்ளது.இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.