குற்றாலம் பேரருவிப் பகுதியில் தீப ஆரத்தி நடைபெற்றது

பேரருவிப் பகுதியில் தீப ஆரத்தி நடைபெற்றது;

Update: 2025-08-04 01:06 GMT
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவிப் பகுதியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, தீப ஆரத்தி நடைபெற்றது. நீா் வளத்தை காப்போம் என்கின்ற நிகழ்ச்சியின் அடிப்படையில் தென்காசி மாவட்ட பா.ஜ.க., சாா்பில் குற்றாலம் பேரருவிக் கரையில் தீப ஆரத்தி நடைபெற்றது. தென்காசி தெற்கு ஒன்றிய பாஜக தலைவா் இசக்கிமுத்து தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் அன்புராஜ், மாவட்ட துணைத் தலைவா் முத்துக்குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பாஜக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்..

Similar News