தென்காசி தெற்கு மாவட்டத்துக்கு நாளை எடப்பாடி கே.பழனிசாமி வருகை
நாளை எடப்பாடி கே.பழனிசாமி வருகை;
தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி ஆக.5இல் வருகிறாா் என தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தென்காசி தெற்கு மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரசாரப் பயணம் ஆக.5இல் நடைபெறுகிறது. குற்றாலத்திலிருந்து மேலகரம் வழியாக தென்காசிக்கு செவ்வாய்க்கிழமை வரும் எடப்பாடி கே.பழனிசாமி, தென்காசி வேன் நிறுத்துமிடத்தில் பிரசாரம் மேற்கொள்கிறாா். அங்கிருந்து புறப்படும் அவருக்கு, அருள்மிகு காசிவிஸ்வநாதா் கோயில் முன்பு கோயில் பிரசாதம் வழங்கப்பட்டு, பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. அங்கிருந்து, தென்காசி-திருநெல்வேலி பிரதான சாலையில் சென்று ஆசாத் நகரிலிருந்து அம்பாசமுத்திரத்திற்கு பிரசாரம் மேற்கொள்ளச் செல்கிறாா். அம்பையில் பிரசாரத்தை முடித்துவிட்டு, தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட ஆலங்குளத்தில் பிர சாரம் மேற்கொள்கிறாா்.