நெமிலி அடுத்த நெல்வாய் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். கருத்து வேறுபாட்டால் பிரிந்து மாமனார் வீட்டில் வசிக்கும் மனைவியிடம் மது போதையில் தகராறு செய்தார். இதை அடுத்து ஆகஸ்ட் 3ம் தேதி நள்ளிரவு மாமனார் தட்சிணாமூர்த்தி உட்பட ஐந்து பேர் புருஷோத்தமனின் வீட்டுக்குச் சென்று கத்தியால் அவரை வெட்டினார்கள். நெமிலி போலீசார் வழக்குப் பதிந்து ஐந்து பேரையும் கைது செய்தனர்.