ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் தாய்ப்பால் விழிப்புணர்வு.
ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் தாய்ப்பால் விழிப்புணர்வு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வாரத்தை ஒட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மருத்துவ அலுவலர் மருத்துவர் எழிலரசி தலைமைவகித்தார். மகப்பேறு டாக்டர் பிரபா முன்னிலை வகித்தார். இதை அடுத்து அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையுடன் உள்ள தாய்மார்களுக்கு பரிசுகள் வழங்கினர். தொடர்ந்து குழந்தைகளுக்கு புது ஆடைகள் மற்றும நிதி உதவியை ஊத்தங்கரை வக்கீல்கள் சங்க துணைத் தலைவர் பிரபாவதி, மற்றும் நித்யா மோகன்ராஜ் உள்ளிட்டோர் வழங்கினர். இதில் செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.