ராயக்கோட்டை அருகே கஞ்சா வைத்திருந்த தொழிலாளி கைது.
ராயக்கோட்டை அருகே கஞ்சா வைத்திருந்த தொழிலாளி கைது.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை போலீசார் உள்ளுகுறுக்கை-திம்ஜேப்பள்ளி சாலை நெருப்பு குட்டை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த நபரை சோதனை செய்தபோது அவர் 1கிலோ 25 கிராம் கஞ்சா வைத்திருப்பது. தெரியவந்தது. விசாரணை நடத்தியதில் தொட்டதிம்மனஅள்ளி அருகே உள்ள நெருப்பு குட்டை பகுதியை சேர்ந்த தொழிலாளி மச்சராஜ் (50) என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.