குமரி மாவட்டம் பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் பொன்னையன் மகள் அனுஷா (22). மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் எம்சிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 1ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அனுஷா பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அனுஷா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தாயார் லட்சுமி என்பவர் புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.