சாலையை சீரமைக்க அமைச்சரிடம் மனு

கிள்ளியூர்;

Update: 2025-08-06 02:57 GMT
குமரி மாவட்டம் கிள்ளியூர் பேரூர் திமுக செயலாளரும்,  பேரூராட்சி துணைத் தலைவருமான சத்யராஜ் சென்னையில் நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே என் நேருவை அவரது இல்லத்தில் நேற்று  நேரில் சந்தித்து பேசினார். அப்போது கிள்ளியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பழுதடைந்த சாலைகளை உடனே சீரமைக்கவும், முதல் நிலை பேரூராட்சியை  தேர்வு நிலை பேரூராட்சியாக உடனடி தரம் உயர்த்த வேண்டும் என்று கூறி மனு அளித்தார் . இதனை அமைச்சர் ஏற்றுக்கொண்டு உடனடியாக சரி செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.

Similar News