காதலன் இறந்த சோகத்தில் இளம்பெண் தற்கொலை

குளச்சல்;

Update: 2025-08-06 03:44 GMT
குமரி மாவட்டம்  குளச்சல், கணேசபுரத்தை சேர்ந்தவர் செல்லதுரை மகள் வித்யா (23). பிளஸ் டூ படித்து விட்டு ஒரு அருகில் உள்ள ஒரு தென்னை நார்  கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். வித்யா அங்கு வேலை பார்த்த மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த அருண் என்ற வாலிபரை காதலித்தார். இந்த காதலை பெற்றோரை இழந்த அருண் உறவினர்கள் ஏற்க மறுத்தனர்.  இந்த நிலையில் கடந்த மாதம் 2ம் தேதி வாலிபர் அருண்  தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனம் உடைந்த வித்யா நேற்று காலை பாத்ரூமில் தூக்கிட்டு உயிரிழந்தார். புகாரின்  பேரில் குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News