நெமிலி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு
12 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு;
நெமிலி வட்டார கல்வி அலுவலகத்துக்கு உட்பட்டு அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 90 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை சோதனை செய்யும் வகையில் கல்வித்துறை அதிகாரிகள் அந்தந்த பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மாணவ, மாணவிகளிடம் தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பிரிவுகளில் கற்றல் திறனை ஆய்வு செய்தனர். அதில் ஜாகீர்தண்டலம், செல்வமந்தை, சயனபுரம் காலனி, கீழ் வீதி உள்ளிட்ட 12 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறப்பாக கற்றல் திறன் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நெமிலி வட்டார வள மையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் முருகன் தலைமை தாங்கி தலைமை ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினார். அப்போது வட்டார கல்வி அலுவலர் மீனாட்சி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாலு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.