பைக் மீது கார் மோதி விபத்து: மீனவர் பரிதாப சாவு!

சாத்தான்குளம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2025-08-06 08:22 GMT
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியை அடுத்த மணப்பாடு சுனாமி காலனியைச் சேர்ந்த அந்தோணி சவரிமுத்து மகன் நிஷாந்தன் (40). மீனவரான இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி தனது தாயின் ஊரான பெரியதாழைக்கு குழந்தைகளுடன் வந்துள்ளார். அவர்களைப் பார்ப்பதற்காக நிஷாந்தன் நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்தார். பெரியதாழையை அடுத்த அழகப்பபுரம் பகுதியில் பைக்கும், எதிரே உவரியிலிருந்து திருச்செந்தூர் சென்ற காரும் மோதின. இதில், படுகாயமடைந்த நிஷாந்தனை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார். தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஸ்டெல்லாபாய் வழக்குப் பதிந்து, கார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News