குமரி மாவட்டம் களியக்காவிளை பிபிஎம் சந்திப்பு முதல் செறுவாரக்கோணம் வரை சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக கேரள மாநிலத்திற்கு அதிக அளவில் கனரக வாகனங்கள் செல்வதால் எப்பொழுதும் சாலை போக்குவரத்து நெருக்கடியாக காணப்படும். மேலும் அதிக பாரத்தில் வாகனங்கள் செல்வதால் சாலை சேதம் அடைந்தது. சாலையில் மிகப் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த சாலையை சீரமைக்க கேரளா பொதுப்பணித்துறை சார்பில் ரூபாய் 5 கோடியில் முழுமையாக தார் போடும் பணி நேற்று தொடங்கப்பட்டது. இதனால் பிபிஎம் சந்திப்பு பகுதியில் பழைய சாலை ஒரு அடி உயரத்தில் தார் பகுதிகள் முழுமையாக அகற்றப்பட்டது. இதனால் அந்த பகுதி வழியாக தற்போது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் பாறசாலை வழியாகவும், மார்க்கெட் சாலை பின் பகுதி வழியாகவும் மாற்றுப்பாதைகளில் இயக்கப்ப்பட்டன.