”உழவரைத்தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை” திட்டம்

கன்னியாகுமரி;

Update: 2025-08-06 12:29 GMT
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டுள்ள அறிக்கை: வேளாண்மை துறையின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள திட்டமான ”உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை” திட்டமானது ஒவ்வொரு வட்டாரத்திலும்   மாதம் தோறும் இருமுறை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் 08.08..2025 அன்று வடக்கு தாமரைகுளம், கணியாகுளம், தாழக்குடி, ஆத்திவிளை, வில்லுக்குறி சி, ஏற்றக்கோடு, மருதங்கோடு, கிள்ளியூர் ஏ, கொல்லம்கோடு ஏ ஆகிய 9 கிராமங்களில் வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையிலும் லீபுரம், தர்மபுரம் வடக்கு, சண்முகபுரம், வாழ்வச்சகோஷ்டம் ஏ, திங்கள்நகர், குலசேகரம் ஏ, அண்டுகோடு ஏ, மத்திக்கோடு, விளாத்துறை ஆகிய 9 கிராமங்களில் தோட்டக்கலை உதவி இயக்குநர் தலைமையிலும் முகாம்கள் நடத்தப்பட உள்ளது.   இம்முகாமில் வேளாண்மை உழவர்நலத்துறையின் கீழ் இயங்கிவரும் அனைத்து துறைகளின் வட்டார அலுவலர்கள், சார்புத்துறை அலுவலர்களான கால்நடைபராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், ஆகியோர்களால் உழவர்களை அவர்களது வருவாய் கிராமங்களுக்கே சென்று நேரடியாக சந்தித்து அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதோடு வேளாண்மையினை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லும் பயிர் சார்ந்த தொழில்நுட்பங்களையும் வேளாண்மை உழவர்நலத்துறை மற்றும சார்புத்துறைகளின் திட்டங்களையும் எடுத்துரைக்க உள்ளனர். இம்முகாம்களில் அனைத்து  விவசாயிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுள்ளார்.

Similar News