கோவில்பட்டியில் எழுத்தாளருக்கு பாராட்டுவிழா

கோவில்பட்டியில், ஒற்றைச் சிறகு ஓவியா என்ற புத்தகத்திற்கு பால புரஸ்கார் சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு த.சி.எ.க.ச. சார்பாக பாராட்டு விழா கி.ரா.மணிமண்டபத்தில் நடைபெற்றது.;

Update: 2025-08-06 14:35 GMT
கோவில்பட்டியில், ஒற்றைச் சிறகு ஓவியா என்ற புத்தகத்திற்கு பால புரஸ்கார் சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு த.சி.எ.க.ச. சார்பாக பாராட்டு விழா கி.ரா.மணிமண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் எழுத்தாளர் விஷ்ணு புரம் சரவணன் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. முதல் நிகழ்வாக எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உருவச் சிலைக்கு விருது பெற்ற எழுத்தாளர் விஷ்ணு புரம் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். த.சி.எ.க.ச.மாநிலத் தலைவர் எழுத்தாளர் உதயசங்கர் நிகழ்வுக்கு தலைமை வகித்தார். நிகழ்வில் எழுத்தாளர் உதயசங்கர் குழந்தைகளுக்காக எழுதிய 7 புத்தகங்களை இயல் பதிப்பக உரிமையாளர் கோ.கண்ணன் வெளியிட எழுத்தாளர் விஷ்ணு புரம் சரவணன் பெற்றுக்கொண்டார். த.சி.எ.க.ச. கோவில்பட்டி கிளை பொருளாளர் ஆசிரியர் கண்ணகி வரவேற்புரை வழங்கினார். த.சி.எ.க.ச. மாநிலத் தலைவர் எழுத்தாளர் உதயசங்கர் தலைமையுரை யாற்றினார். மாவட்டத் தலைவர் கு.இராமசுப்பு வாழ்த்துரை வழங்கினார். கோவில்பட்டி கிளைச் செயலாளர் கி.பிரபு, தூத்துக்குடி கிளைச் செயலாளர் மை.வாலண்டினா, திருச்செந்தூர் கிளைச் செயலாளர் பா.பேச்சியம்மாள் முக்காணி கிளைச் செயலாளர் மு.சண்முக வடிவு வாழ்த்துரை வழங்கினர். நான்கு கிளைகளைச் சார்ந்த 8 குழந்தைகள் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் புத்தகங்கள் பற்றி பேசினார். விருது பெற்ற எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன்க்கு பயனாடையும், நினைவுப்பரிசும் குழந்தைகளால் வழங்கப்பட்டது. கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து குழந்தைகளுக்கும் ஒற்றைச் சிறகு ஓவியா புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. விருதுபெற்ற எழுத்தாளர் விஷ்ணு புரம் சரவணன் மிகச் சிறந்த ஏற்புரை வழங்கினார். த.சி.எ.க.ச.கோவில்பட்டிகிளைத் எழுத்தாளர் ராஜலட்சுமி நாராயணன் நன்றியுரை வழங்கினார். நிகழ்வு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 4 கிளைகளின் ஒத்துழைப்புடன் இனிதே நிறைவடைந்தது.

Similar News