ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை!

ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை!;

Update: 2025-08-07 05:19 GMT
ஆற்காடு நகராட்சியில் 102 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்த காலம் முடிந்த நிலையில் மகளிர் சுய உதவிக்குழு வாயிலாக தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு தினக்கூலி அடிப்படை யில் ரூ.489 வீதம் வழங்க வேண்டும். ஆனால், ரூ.370 மட்டுமே வழங்கப்படுகிறது. இதற்கிடையே, 2 மாதங்களாக தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், ஆனால் அவர்களின் வங்கி கணக்கில் இருந்து ரூ.489 பணம் எடுக்கப்பட்டதாக புகார் தெரி விக்கப்பட்டது. இந்த புகார் குறித்து மாவட்ட ஆய்வுக்குழு துணைத்தலைவர் ரமேஷ் தலைமையில் ராணிப்பேட்டை லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், இன்ஸ் பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ஆற்காடு நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அலுவல கத்தில் நேற்று 3 மணி வரை அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் கணக்கில் வராத ரூ.79 ஆயிரத்து 282-யை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் நகராட்சி அலுவ லர்கள் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

Similar News