சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் குளம் சீரமைப்பு!

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் குளம் சீரமைப்பு!;

Update: 2025-08-07 05:29 GMT
சோளிங்கர் கமலவிநாயகர் கோவில் பின்புறம் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலுக்கு சொந்தமான திருக்குளத்தில் தூய்மை பணி நடைபெற்றது. கோவில் உதவி ஆணையர் ராஜா தலைமையில், கமலவிநாயகர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, நகராட்சி கவுன்சிலர்கள் அசோகன், வேண்டா நரசிம்மன் ஆகியோர் மேற்பார்வையில் இந்த தூய்மை பணிகள் நடைபெற்றது. சோளிங்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்.சி.சி. மாணவர்கள் 40 பேர் தூய்மை பணியில் ஈடுபட்டு குளத்தின் படிக்கட்டுகளில் இருந்த செடிகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர், டம்ளர், குப்பைகள் ஆகியவற்றை அகற்றினர். கோவில் கண்காணிப்பாளர் கலையரசன் மற்றும் நல்லப்பன், கோவில் ஊழியர்கள் சுரேஷ் சீனிவாசன், சின்னசாமி, சம்பத் மற்றும் விநாயகர் கோவில் நடராஜன் ஆகியோரும் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

Similar News