குளித்தலையில் நகர திமுக சார்பாக கலைஞர் நினைவு நாள் அனுசரிப்பு
பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கிய குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம்;
கரூர் மாவட்டம் குளித்தலை காந்தி சிலை முன்பு திமுக குளித்தலை நகரம் சார்பில் டாக்டர் கலைஞர் நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார். இதில் திமுக மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவி ராஜா, மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், நகர துணைச் செயலாளர் செந்தில்குமார், நகர பொருளாளர் தமிழரசன், பொறியாளர் அணி இன்ஜினியர் கணேஷ், நகர அவைத் தலைவர், அரசு வழக்கறிஞர் சாகுல் அமீது, நகரத் தொண்டரணி அமைப்பாளர் மது, மேட்டுமருதூர் சதீஷ் உள்ளிட்ட நகர திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்