நாம் தமிழர் கட்சியினர் விளம்பர பலகைகளை கிழித்தெறிந்து போராட்டம்.
தூத்துக்குடியில் கிங்டன் திரைப்படம் திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பெரிசன் சினிமா திரையரங்க வளாகத்தில் நாம் தமிழர் கட்சியினர் அத்துமீறி நுழைந்து விளம்பர பலகைகளை கிழித்தெறிந்து போராட்டம் பரபரப்பு;
தூத்துக்குடியில் கிங்டன் திரைப்படம் திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பெரிசன் சினிமா திரையரங்க வளாகத்தில் நாம் தமிழர் கட்சியினர் அத்துமீறி நுழைந்து விளம்பர பலகைகளை கிழித்தெறிந்து போராட்டம் பரபரப்பு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படமான 'கிங்டம்', இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து சென்ற மலையகத் தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்களை அடிமைகள் போலும் கடத்தல் காரர்கள் போன்று இத்திரைப்படத்தில் காட்சிகள் இடம் பெற்று உள்ளன. மேலும் இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன எனவே இந்த காட்சிகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் இந்த திரைப்படத்தை வெளியிடப்பட்டுள்ள திரையரங்கு முன்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது . இதைத்தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 'கிங்டம்' படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் பாராளுமன்ற பொறுப்பாளர் ராஜசேகர் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் தூத்துக்குடியில் கிங்டம் திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பெரிசன் சினிமா திரையரங்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் திரையரங்கம் முன்பு வைக்கப்பட்ட கிங்டம் பட விளம்பரப் பலகை திரையரங்க வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து கிங்டம் பட போர்டுகளை கிழித்தெறிந்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது அப்போது அங்கே நாம் தமிழர் கட்சியினர் மற்றும் திரையரங்க ஊழியர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதை தொடர்ந்து கிங்டம் திரைப்படம் வெளியிடப்பட்டால் திரையரங்கை தொடர்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் அறிவித்தனர். இதையடுத்து திரையரங்கில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.