முன்னாள் முதலமைச்சரின் நினைவு தினம் அனுசரிப்பு
முன்னாள் முதலமைச்சரின் நினைவு தினம் அனுசரிப்பு;
செங்கல்பட்டு மாவட்டம்,காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பரனூர் அரசு மறுவாழ்வு இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 7 -வது ஆண்டு நினைவு அஞ்சலி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் தலைமையில்,ஊராட்சி மன்ற தலைவர் டில்லி முன்னிலையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்துக்கொண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, இல்லத்தில் வசிப்போருக்கு மதிய உணவு வழங்கினார்.காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய பொருளாளர் ஜீவானந்தம்,இளைஞர் அணி துணை அமைப்பாளர் VDS.சதிஷ், மணி,அஞ்சூர் கணேஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள்,மறுவாழ்வு இல்ல அதிகாரிகள் என பலர் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.