கிருஷ்ணகிரியில் தவாக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கிருஷ்ணகிரியில் தவாக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.;

Update: 2025-08-07 12:56 GMT
கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான திரைப்படம் கிங்டம். இத்திரைப்படம் கடந்த 31ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியானது இந்த படத்தில் இலங்கை தமிழர்களை கொடியவர்கள் போன்ற சித்தரித்து காட்சிகள் உள்ளதாக தமிழ் கடவுளான முருகன் பெயரை வில்லனுக்கு சூட்டி உள்ளதாக அமைந்துள்ளது. என்று இதை எதிர்த்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் நெப்போலியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி அண்ணா சிலை அருகே திரைப்படத்தை திரையிட்ட திரையரங்கத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திரளான தவாக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News