மத்தூர்: தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது.
மத்தூர்:தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது.;
மத்தூர் அருகே சாலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் போச்சம்பள்ளி அருகே உள்ள கதக்களி கொட்டாயை சேர்ந்த தொழிலாளி வேலாயுதம் (45) இவரது 2 மகள்கள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் வேலாயுதத்தின் மனைவி பெற்றோர் தனது தாய்வீட்டில் வசித்து வருகிறார். சம்வம் அன்று வேலாயுதம் அரசு பள்ளிக்கு சென்று தனது 2 மகள்களையும் பார்க்க வேண்டும் என்று தலைமை ஆசிரியராக வேடியப்பன் என்பவரிடம் கூறியுள்ளார். இதற்கு தலைமை ஆசிரியர் மறுப்பு தெரிவிக்கவே அவருக்கு வேலாயுதம் கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலாயுதத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.