கலைஞரின் நினைவு நாளையொட்டி மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
கலைஞரின் நினைவு நாளையொட்டி மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி;
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் நினைவு நாளையொட்டி மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய கழகச் செயலாளர் படாளம் சத்யசாய் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ அவர்கள் கலந்து கொண்டு கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பின்னர் ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.