வன விலங்குகள் பாதுகாப்பு: பாதுகாப்பில்லாத கிணறுகள் குறித்து நோட்டீஸ் வழங்கும் நடவடிக்கை
கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வன எல்லை சாடிவயல் பகுதியில், 22 வயது ஆண் யானை தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வன விலங்குகள் உயிரிழப்பைத் தவிர்க்க வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.;
கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வன எல்லை சாடிவயல் பகுதியில், 22 வயது ஆண் யானை தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வன விலங்குகள் உயிரிழப்பைத் தவிர்க்க வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வனப்பகுதிகளை ஒட்டிய கிராமங்களில் திறந்த மற்றும் பாதுகாப்பு இல்லாத கிணறுகள் அடையாளம் காணப்பட்டு, உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. பாதுகாப்பு வேலி அல்லது தடுப்பு சுவர் இல்லாத கிணறுகளை சரி செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஏழு வன சரகங்களில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டு, இத்தகவலை மாவட்ட வனத்துறைக்கு அறிக்கையாக வழங்க உள்ளனர். எதிர்காலத்தில் யானைகள் நடமாடும் பகுதிகள் வரைபடமாக தயாரிக்கப்பட்டு, ஊழியர்களுக்கு முன்னெச்சரிக்கை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.