கிங்டம் திரைப்படத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் !

நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் திரைப்படத்தில் இலங்கைத் தமிழர்களைப் பற்றி சர்ச்சைக்குரிய கூறுகள் உள்ளதாகக் கூறி, அதை ரத்து செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2025-08-08 07:20 GMT
நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் திரைப்படத்தில் இலங்கைத் தமிழர்களைப் பற்றி சர்ச்சைக்குரிய கூறுகள் உள்ளதாகக் கூறி, அதை ரத்து செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். புரூக்பீல்டு சாலையில் உள்ள வணிக வளாக திரையரங்கத்தில் போராட்டம் நடத்தி, திரைப்படத்தை ரத்து செய்யக் கோரினர். சுமார் 50 பேர் சேர்ந்து முழக்கமிட்டதால் பரபரப்பு நிலவியது. பின்னர் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். படம் ரத்து செய்யப்படாவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Similar News