தேசிய கைத்தறி தினம்: கோவையில் கொண்டாட்டம்

சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டது.;

Update: 2025-08-08 07:22 GMT
கோவை அவிநாசி சாலையில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் நேற்று தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் சவுதாமினி கைத்தறி இயக்குநர் அனகா கைசாஸ், தேசிய கைத்தறி மேம்பாட்டு கழகத்தின் மேலாளர் ரத்தினவேல், சிருஷ்டி கார்ட்ஸ்பின் இயக்குநர் பிரமோத்குமார் ஜஜாரியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் அல்லிராணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கைத்தறி உற்பத்தியின் முக்கியத்துவம் குறித்து மாணவ மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. மாணவிகள் கலந்து கொண்ட பாரம்பரிய உடை ஃபேஷன் ஷோவும் அரங்கேறியது. மேலும் கைத்தறி நெசவாளர்கள் விற்பனைக்காக அமைத்திருந்த சேலை அரங்குகளையும் விருந்தினர்கள் பார்வையிட்டனர்.

Similar News