வால்பாறை நகராட்சியில் நடைபெற இருந்த ரகசிய வாக்கெடுப்பு : அனுமதி மறுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் - கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார்
நகராட்சி ஆணையரின் ஒருதலை பட்ச செயலைக் கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார்.;
கோவை மாவட்டம் வால்பாறையில் தற்பொழுது நகர்மன்ற தலைவராக இருக்கும் அழகு சுந்தர வள்ளி (தி.மு.க) மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர 13 தி.மு.க கவுன்சிலர்கள் மற்றும் ஒரு அ.தி.மு.க கவுன்சிலர்கள் மனு அளித்து இருந்தனர் அதன்படி அதற்கான கூட்டமும் ரகசிய வாக்கெடுப்பும் நேற்று காலை 11 மணி அளவில் நடைபெற இருந்த நிலையில் நகராட்சி கூட்ட அரங்கில் வாக்கு பெட்டியுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நகராட்சி ஆணையாளர் கணேசன் அமர்ந்து இருந்தார். இந்நிலையில் இந்த ரகசிய வாக்கெடுப்பில் 21 வது வார்டு கவுன்சிலர் உமா மகேஸ்வரி மட்டும் கலந்து கொண்ட நிலையில், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்திய 14 கவுன்சிலர்களும் செல்போனுடன் செல்ல அனுமதிக்க வேண்டி கோஷம் எழுப்பிய நிலையில் நுழைவாயிலில் அனுமதி மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆணையாளரை கண்டித்து நகராட்சி முன்பு கண்டன கோஷம் எழுப்பினர். இந்நிலையில் கூட்ட அரங்கில் குறிப்பிட்ட நேரம் வரை காத்து இருந்து வெளி வந்த ஆணையாளர் கணேசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது நேற்று நடைபெற இருந்த ரகசிய வாக்கெடுப்பு மற்றும் கூட்டத்தில் மொத்தம் உள்ள 21 வார்டு நகர் மன்ற உறுப்பினர்களில் 7 பேராவது கலந்து இருந்தால் விவாத கூட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒருவர் மட்டுமே கலந்து கொண்டதால் தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு இல்லாத நிலையில், தேர்தல் நிறைவு அடைந்ததாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து நகராட்சி ஆணையரின் இந்த ஒருதலை பட்ச செயலைக் கண்டித்து அவர் மீது கோவை மாநகர ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்தனர் : இது குறித்து அ.தி.மு.க 17 வார்டு கவுன்சிலர் மணிகண்டன் கூறும் போது :vகடந்த 17ஆம் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு மனு அளித்ததாகவும், இன்று ரகசிய வாக்கெடுப்பிற்கு தேதி அறிவித்து இருந்த நிலையில், நேற்று வார்டு கவுன்சிலர் ஒருவரை கடத்தி விட்டதாகவும், காலை 10.45 மணிக்கு 14 கவுன்சிலர்களை சென்ற போது அவர்கள் நுழைவாயில் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என்றும், அவர்கள் வராத காரணத்தினால் அவர்களை வரவில்லை நீங்கள் இதற்கு வருகிறார்கள் என்று அனுமதிக்கவில்லை எனவும், காவலர்களை வைத்து தள்ளி அவமதித்ததாகவும், வெளியேற்றியதாகவும் கூறியவர், வார்டு உறுப்பினர்கள் சென்றால் தான் கோரம் கேட்க முடியும் என்றும் கூறியதாகவும், அதற்கு நீங்கள் கோரம் கேட்க வேண்டாம் என்றும் உங்களது செல்போன், செயின், மோதிரம், பெல்ட் போன்றவற்றை இங்கேயே வைத்து செல்ல வேண்டும் என்றும் காவல்துறை கூறியதாகவும், மேலும் அலுவலகத்திற்கு சென்று கொடுப்பதாக கூறி உள்ளனர். இதனால் 10 45 மணி முதல் 11.35 வரை எங்களுடன் வாக்குவாதம் செய்து காவல் துறையினர் வெளியேற்றி விட்டனர் என்று குற்றம் சாட்டிய அவர், உடல்நிலை சரியில்லாத உறுப்பினர்கள் கூட வெயிலில் நிறுத்தி மயக்கம் அடையும் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டோம் என்றவர், இதுகுறித்து துணைக் காவல் கண்காணிப்பாளரிடம் கூறிய போது, உள்ளே சென்றவர் சிறிது நேரத்தில் திரும்பி வந்து நேரம் முடிந்துவிட்டது என்று கூறியதாகவும், மேலும் நகராட்சி ஆணையாளர் நீங்கள் என்ன செய்ய முடியுமோ ? செய்து கொள்ளுங்கள் என்றும், தலைவருக்கு சாதகமாக ஆணையர் கூறி, அவர்களை அவமானப்படுத்தி அனுப்பி விட்டதாக கூறியவர், எனவே இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததாகவும், அதற்கு அவர் பரிசீலனை செய்து செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதாக தெரிவித்தார்.