ஓசூர்: இறைச்சி கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை.
ஓசூர்: இறைச்சி கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம்நகர் ஏ.எஸ்.டி.சி. பள்ளம் பகு தியை சேர்ந்தவர் ரோஷன் ஜமீர் ( 50) இவர் கோழி இறைச்சி கடை வைத்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு கடன் பிரச்சினை இருந்தாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஓசூர் டவுன் போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.