ஓசூர்:காதலுக்கு எதிர்ப்பு-விஷம் குடித்த வாலிபர் உயிரிழப்பு.
ஓசூர்:காதலுக்கு எதிர்ப்பு-விஷம் குடித்த வாலிபர் உயிரிழப்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கோவிந்த அக்ரஹாரம் பகுதியை சேரந்தவர் ஸ்ரீகாந்த் (23) இவர் 17 வயதுடைய பெண்ணை காதலித்து வந்துள்ளார். இரு தரப்பு பெற்றோர்களும் இந்த காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் மனமுடைந்த காதல் ஜோடிகள் பேகேப்பள்ளி ராஜேஸ்வரி லேஅவுட்டில் உள்ள விநாயகர் கோயில் அருகே விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ஸ்ரீகாந்த் உயிரிழந்தார். அவர் காதலித்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஒசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.