குருபரப்பள்ளி அருகே லாரி மோதி விவசாயி உயிரிழப்பு.

குருபரப்பள்ளி அருகே லாரி மோதி விவசாயி உயிரிழப்பு.;

Update: 2025-08-09 01:42 GMT
கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிக்க வீரப்பா (46) விவசாயியான. இவர்சம்வம் அன்று கிருஷ்ணகிரி அருகே பந்தாரப்பள்ளிக்கு வந்திருந்தார். அப்போது அந்த பகுதியில் நடந்து சென்றார். அந்த சமயம் அந் தவழியாக வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சிக்கவீரப்பாவை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News