முக்கடலும் சங்கமிக்கும் இடமான கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை எப்போதும் அதிகமாக இருக்கும். காலை சூரிய உதயம், விவேகானந்தர் பாறை, பிரமாண்ட திருவள்ளுவர் சிலை, படகுப் பயணம் உள்ளிட்டவை இருப்பதால் உள்நாட்டு சுற்றுலா பயணிகளையும் தாண்டி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கன்னியாகுமரிக்கு விரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், விவேகானந்தர் பாறைக்கு படகுகளில் செல்ல நீண்ட வரிசையில் காத்திருந்து பயணம் செல்ல வேண்டிய நிலை இருந்ததால், சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்து வந்தனர். பலர் அங்கு செல்லாமலேயே சொந்த ஊர் திரும்பினர். இந்த நிலையில், இன்று முதல் விவேகானந்தர் பாறைக்கு படகுகளில் செல்ல ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுத்துக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக இணையதளமான https:www.psckfs.tn.gov.in-ல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.