நாகர்கோவில் : பா ஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட்;

Update: 2025-08-09 04:01 GMT
குமரிமாவட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒன்றிய பி. ஜே. பி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்க்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகர்கோவில் மாநகர செயலாளர் கே. நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பி. தாமரைசிங், மாவட்டக்குழு உறுப்பினர் வி. அருள்குமார் முன்னிலைவகித்தனர். மாவட்ட துணைச்செயலாளர் எஸ். அனில்குமார் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் ஜி. சுரேஷ் மேசிய தாஸ் கண்டன ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். நாகர்கோவில் மாநகர பொருளாளர் சி. நாகப்பன் நன்றி கூறினார்.

Similar News