கோவை: ஊர்ப்புற நூலகர்கள் உண்ணாவிரத போராட்டம் !

ஊர்ப்புற நூலகர்கள் நல அமைப்பின் சார்பில், ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவும், பதவி உயர்வு அளிக்கவும், மாநிலம் முழுவதும் உள்ள ஊர்ப்புற நூலகங்களை கிளை நூலகங்களாக தரம் உயர்த்தவும் கோரி உண்ணாவிரத போராட்டம்.;

Update: 2025-08-09 05:53 GMT
தமிழ்நாடு பொது நூலகத் துறை ஒருங்கிணைந்த ஊர்ப்புற நூலகர்கள் நல அமைப்பின் சார்பில், ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவும், பதவி உயர்வு அளிக்கவும், மாநிலம் முழுவதும் உள்ள ஊர்ப்புற நூலகங்களை கிளை நூலகங்களாக தரம் உயர்த்தவும் கோரி கோவை சிவானந்தா காலனி பவர் ஹவுஸ் அருகே நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மாநில துணைச் செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கி, ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரன் முன்னிலை வகித்தார். 8 மாவட்டங்களை சேர்ந்த நூலகர்கள் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் உடனடி அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Similar News