போச்சம்பள்ளி அருகே தார்ச்சாலை அமைக்க பூமி பூஜை.
போச்சம்பள்ளி அருகே தார்ச்சாலை அமைக்க பூமி பூஜை.;
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதி, போச்சம்பள்ளி ஒன்றியம், வெப்பாலம்பட்டி ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.33.8 இலட்சம் மதிப்பீட்டில் தொப்படிகுப்பம் முதல் ஆவல்நாயக்கன்பட்டி வரை தார்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கான இன்று பூமி பூஜை நடைபெற்றது. இதில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர். மதியழகன் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து வைத்து பணிகளை துவக்கி வைத்தார். திரளான திமுகாவினர் பலர் கலந்துக்கொண்டனர்.