அரக்கோணம் அருகே ஜாமீனில் வந்தவர் வெட்டிக் கொலை!
ஜாமீனில் வந்தவர் வெட்டிக் கொலை!;
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள அம்மனூர் பகுதியை சேர்ந்த திமுக கட்சி நிர்வாகி சுதாகர் (45). இவரிடம் பணிபுரிந்தவர் அபினேஷ் (31). இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அபினேஷ் சுதாகரை கடந்த ஏப்ரல் மாதம் கொலை செய்ய முயன்றுள்ளார். இதற்காக அபினேஷ் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார். ரத்தனகிரி காவல் நிலையத்திற்கு நேற்று (ஆகஸ்ட் 10) கையெழுத்திட சென்ற போது அபினேஷ் வெட்டி கொலை செய்யப்பட்டார்.